‘லாஸ் ஏஞ்சல்ஸ் - இந்திய பட விழா’வில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’

By செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் இறுதிநாள் நிகழ்வில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ்ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழா (Indian Film Festival of Los Angeles) வரும் ஜூன் 27 தொடங்கி 30-ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வங்கதேசம், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, கனடா, அமெரிக்காவின் பங்களிப்பில் உருவாகியுள்ள ‘Dear Jassi’ திரைப்படம் முதல் நாள் நிகழ்வில் திரையிப்பட உள்ளது. இறுதி நாளில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார்.

இவை தவிர்த்து, நிகில் நாகேஷ் இயக்கியுள்ள இந்திப் படமான ‘கில்’, ப்ரீத்தி பாணிக்ரஹியின் ‘கேர்ள் வில்பி கேர்ள்ஸ்’ (Girls Will Be Girls) ஆகிய இந்தியப் படங்கள் திரையிடப்பட உள்ளன. அத்துடன் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு படங்களும், ஆவணப் படம் ஒன்றும் திரையிடப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்