‘ராயன்’ முதல் சிங்கிள் | ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் குரலில் ‘அடங்காத அசுரன்’ எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ‘அடங்காத அசுரன்’ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள படம் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நேற்று (மே 09) வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுதியுள்ள இப்பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்து பாடியுள்ளனர்.

பாடல் எப்படி? - ‘அடங்காத அசுரன் தான்.. வணங்காத மனுஷன் தான்’ என்று தனுஷின் குரலில் தொடங்கும் இப்பாடல், மிகவும் சீரியஸ்தன்மையை கொண்டிருக்கிறது. சிம்பு நடித்த ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற ‘ஒசரட்டும் பத்து தல’ பாடலின் தொடக்கத்தை நினைவூட்டுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் ‘போகி போகி போகி’ என்று உச்சஸ்தாயில் வரும் இடம் அசத்தல். அதே போல இன்னொரு இடத்தில் வரும் ‘உசுரே நீதானே’ என்ற பகுதி ரீல்ஸ், ஷார்ட்ஸ்களில் வைரலாக வலம் வரலாம்.

‘நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில இல்ல’ உள்ளிட்ட தனுஷின் வரிகள் கவனிக்க வைக்கின்றன. ரஹ்மானின் ஸ்லோ பாய்சனாக இல்லாமல் கேட்ட உடனே பிடிக்கும் வகையில் பாடல் இருப்பது சிறப்பு.

‘அடங்காத அசுரன்’ பாடல் லிரிக்கல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்