சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இதில், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்படுகின்றன.
கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஜீவா, ஜெய் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகம் வெளியாகும்என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே சுந்தர். சி இயக்கிய ‘அரண்மனை 4’, கடந்த 3-ம் தேதி வெளியானது. இதில் தமன்னா, ராஷி கன்னா உட்பட பலர் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சுந்தர்.சி, ‘கலகலப்பு’படத்தின் 3-ம் பாகத்தை இயக்க இருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவிமல், மிர்ச்சி சிவா நடிக்க இருக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago