விஜயவாடா: ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் 'தேவாரா'. கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தி நடிகர் சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், நரேன், கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் அல்லுரி மாவட்டத்தில் உள்ள மொடகொண்டம்மா பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது தேனீக்கள் திடீரென்று படையெடுத்து வந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தேனீக்கள் கொட்டி படக்குழுவினர் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர், ‘வார்’ படப்பிடிப்பில் இருப்பதால், அவரும் ஜான்வி கபூரும் இதில் பங்கேற்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago