மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

By செய்திப்பிரிவு

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பைசன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில் நடித்த படம் ’மாமன்னன்’. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கிவந்தார். குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கும் மற்றொரு புதிய படத்துக்கு ‘பைசன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இதனை தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய காளை சிலைக்கு முன்னால் நாயகன் துருவ் விக்ரம் அமர்ந்திருப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியிருந்த நிலையில், இப்படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்