டைட்டானிக் பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் சினிமா நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார். அவருக்கு வயது 79. டைட்டானிக், தி லார்ட் ஆப் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் கடந்த 1944-ல் பெர்னார்ட் ஹில் பிறந்தார். நாடக கலையில் டிப்ளோமா முடித்தார். அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். 1982-ல் வெளிவந்த காந்தி படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘டைட்டானிக்’ படத்தில் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக நடித்திருந்தார். அந்த படத்தில் கேப்டன் எட்வர்ட் ஜே.ஸ்மித் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். தி ஸ்கார்பியன் கிங், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அமெரிக்க நடிகை மரியானா அவரது மனைவி ஆவார். இவர்களுக்கு கேப்ரியல் எனும் மகன் உள்ளார். சுமார் 50 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கிய அனுபவம் கொண்டவர். அவரது மறைவு செய்தியை அறிந்து திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்