மவுன குரு, மகாமுனி படங்களை இயக் கிய சாந்தகுமார், அடுத்து இயக்கியுள்ள படம், 'ரசவாதி -தி அல்கெமிஸ்ட்' . அர்ஜுன்தாஸ், தான்யா ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
படம் பற்றி இயக்குநர் சாந்தகுமார் கூறியதாவது: “சித்த மருத்துவரான அர்ஜுன் தாஸ் கொடைக்கானலில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருடைய கடந்த கால விஷயங்கள் அவரைத் துன்புறுத்துகின்றன. அதற்கு அவர் என்ன தீர்வு காண்கிறார் என்பது படம்.
உறவுகளை மையப்படுத்திய கதை. அர்ஜுன் தாஸ் இரண்டு தோற்றங்களில் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். மலையாளப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சுஜித் சங்கர் இதில் போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடித்துள்ளார்.
எனது முந்தைய படங்களைப் போல இதுவும் தனித்துவமாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். ஒவ்வொரு படத்துக்கும் அதிக இடைவெளி ஏன் என்று கேட்கிறார்கள். கதைக்காக அவ்வளவு கால இடைவெளி தேவைப்படுகிறது” என்று சாந்தகுமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago