குருவாயூர் கோயிலில் நடந்த ஜெயராமின் மகள் திருமணம்!

By செய்திப்பிரிவு

திரிச்சூர்: பிரபல நடிகர் ஜெயராமின் மகளான மாளவிகா ஜெயராம் திருமணம் கேரளாவின் குருவாயூர் கோயிலில் எளிமையாக நடைபெற்று முடிந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது தனித்துவ நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் திரையுலகில் நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவ்னீத் கிரிஷ்என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நவ்னீத் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். மாளவிகாவும் நவ்னீத்தும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் முடித்தனர். கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

இதில் நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களும், உறவினர்களுக் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது. ஜெயராமின் மகன் காளிதஸுக்கு கடந்த நவம்பர் மாதம் மாடல் தாரிணி என்பவருடன் நிச்சயம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்