சென்னை: நடிகர் விஜய்யின் மகள் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் நடிக்க இருப்பதாக வெளியாக தகவல் குறித்து நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார்.
லண்டனில் சினிமா தொடர்பான படிப்பை நிறைவு செய்துள்ள ஜேசன் சஞ்சய் தற்போது தனது முதல் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இதுகுறித்து அண்மையில் பேசிய கவின், “விஜய்யின் மகன் சஞ்சய் தன்னை நேரில் சந்தித்து இப்படம் குறித்து பேசியதாகவும், கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு தன்னை அது தொடர்பாக யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் ‘ஸ்டார்’ படத்தில் கவின் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago