சென்னை: உடல் நலக்குறைவால் காலமான பிரபல பாடகி உமாரமணனுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகி உமாரமணன் (72). கர்நாடக இசைப் பாடகியான இவர், பின்னர் திரைப்படங்களில் பாடினார். இளையராஜா இசையில், நிழல்கள் படத்துக்காக, தீபன்சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடிய ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடல் மூலம் பிரபலமானார்.
சூப்பர் ஹிட் பாடல்கள்: தொடர்ந்து, பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ‘ஆனந்த ராகம்’, மெல்லபேசுங்கள் படத்தில், ‘செவ்வந்திப் பூக்களில்...’, ஒரு கைதியின் டைரி படத்தில் ‘பொன்மானே..’, கேளடி கண்மணி படத்தில் ’நீ பாதி நான் பாதி’, தென்றலே என்னைத் தொடு படத்தில் ‘கண்மணி நீ வரகாத்திருந்தேன்’, மகாநதி படத்தில்‘ரங்க ரங்கநாதனின் பாதம்’, திருப்பாச்சி படத்தில் ‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப்பாடியுள்ளார். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர், மணிசர்மா, தேவா உட்படபல்வேறு இசை அமைப்பாளர் களின் இசையில் பாடியுள்ளார்.
இவர், மேடைக் கச்சேரிகளை நடத்தி வந்த நடிகரும் இசை அமைப்பாளருமான ஏ.வி.ரமணனுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் இணைந்து 6 ஆயிரத்துக்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை நடத்தியுள்ளனர்.
» கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’ நாவல் ஆங்கிலத்தில் வெளியீடு
» மன்னிப்புக் கேட்ட பிரபுதேவா - சென்னை நிகழ்வில் ரசிகர்கள் கொந்தளிப்பால் சலசலப்பு
35 வருடங்களாகப் பாடி வந்தஇவர், தனது கணவரும் பாடகரு மான ஏ.வி.ரமணன் மற்றும் மகன் விக்னேஷ் ரமணனுடன் சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப் பட்டு வந்த உமா ரமணன், நேற்று முன்தினம் இரவு காலமானார்.
இறுதிச் சடங்கு: அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.உமா ரமணன் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago