திருவனந்தபுரம்: “நான் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். இருந்தபோதிலும், வீட்டில் முடங்கிவிடாமல் தொடர்ந்து என்னால் முடிந்தை செய்து கொண்டிருக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடுங்கள்” என மலையாள நடிகை அன்னா ராஜன் தன் மீதான உருவக்கேலி விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற மலையாள படமான ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் லிச்சி கதாபாத்திரத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அன்னா ராஜன். அவர் ஆட்டோ இம்யூன் தைராய்டு (autoimmune thyroid) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது உடல் எடையில் ஏற்ற இறக்க மாற்றங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோவை பலரும் ட்ரால் செய்தனர். மேலும், உருவக்கேலி தொடர்பான கருத்துகளை வெளியிட்டனர். இது தொடர்பான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள அவர், “உங்களுக்கு என்னுடைய வீடியோ பிடிக்கவில்லை என்றால் கருத்தை பதிவிடுங்கள். அதை விடுத்து மோசமான உருவக்கேலி தொடர்பான கமென்டுகளை பதிவிடுவது வருத்தமளிக்கிறது.
நான் ஆட்டோ இம்யூன் தைராய்டு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் என் உடலில் எடை கூடும். சில நேரம் எடை குறையும். கடந்த 2 ஆண்டுகளாக மூட்டுவலி, உடல் வீக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வந்த போதிலும், நான் வீட்டில் எதுவும் செய்யாமல் அமைதியாக முடங்கிப் போகவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாக செய்துவருகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
அன்னா ராஜனை பொறுத்தவரை, ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் அறிமுகமானவர், ‘மதுர ராஜா’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ரெண்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர். கடைசியாக 2022-ஆம் ஆண்டு வெளியான ‘திரிமலி’ படத்தில் நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago