“சிங்கிளா சுத்த நான் சிம்பு இல்ல” - சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - “நடிகர் சங்கத்த கட்டி முடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் சொல்ல நான் விஷாலும் இல்ல”, “எப்பவும் சிங்கிளா சுத்திட்டு இருக்க சிம்புவும் இல்ல” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் தம்பி ராமையாவின் நகைச்சுவை கவனம் பெறுகிறது.

படம் முழுவதும் நகைச்சுவையாக நகரும் என்பதை காட்சிகள் உறுதி செய்கின்றன. இமானின் பின்னணி இசை ட்ரெய்லரில் தனித்து தெரிகிறது. டைமிங் வசனங்கள் படத்தில் கைகொடுக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. இறுதியில் சந்தானத்தின் ஆக்‌ஷன் காட்சிக்கும் இடம் உண்டு. படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்