ஹைதராபாத்: ‘கல்கி 2898’ படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அஸ்வத்தாமா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், முகம் முழுக்க கட்டுப் போட்டு தவம் செய்து கொண்டிருக்கும் அமிதாப் பச்சனிடம் சிறுவன் ஒருவன் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்கு பதிலளிக்கும் அமிதாப், பல யுகங்களாக காத்துக் கொண்டிருக்கும் தனது பெயர் அஸ்வத்தாமா என்று பதிலளிக்கிறார். சந்தோஷ் நாராயணனின் மிரட்டலான பின்னணி இசையில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago