வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ரூ.50 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மலையாளப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham).

படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தியான் ஸ்ரீனிவாசன், பசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் படத்துடன் சேர்ந்து வெளியான ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ மலையாளப் படமும் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. > விமர்சனத்தை வாசிக்க: ‘Varshangalkku Shesham’ Review: கோடம்பாக்கம் கதைக்களத்தில் நிறைவு கிட்டியதா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்