சென்னை: அஜித்குமார் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த திரைப்படம் ‘மங்காத்தா’. இதில் அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அஜித் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் அப்போது பெரிதும் பேசப்பட்டது. வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் அமோகமாக போய்க் கொண்டிருக்கும் சூழலில், வரும் மே 1ஆம் தேதி, அஜித் பிறந்தநாளையொட்டி இப்படம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதனையடுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் #Mankatha #MankathaRerelease உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதே போல விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படமும் வரும் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago