கவனம் ஈர்க்கும் வரிகளும், குறியீடுகளும் - கோபி நயினார், ஆண்ட்ரியாவின் ‘மனுசி’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். இவர் அடுத்ததாக நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘மனுசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - வீட்டிலிருக்கும் ஆண்ட்ரியா காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார். அங்கு அவருக்கு பல்வேறு சித்ரவதைகள் நடக்கின்றன. அவரை நோக்கி தொடர் கேள்விகள் எழுப்படுகின்றன. விசாரணை அதிகாரிகளாக நாசர், தமிழ், ஹக்கிம் ஷா வருகின்றனர். இடையிடையே வரும் வசனங்கள் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன.

“ஒரு பொண்ண அடிக்கிறது தப்புங்குற குற்றவுணர்வு இல்லாதவன் கூட எப்டி மேடம் வாழ்றது?”, “எங்க பேர எங்க விருப்பபடி எழுத விடமாட்டீங்களா?”, “சாதி, மதம், நிறம், வர்க்கம் உருவாக்கியிருப்பதை அறிவியல் மூலமா மாத்த விரும்புறேன்”, “ஒரு விளையாட்டுல வெறும் இந்தியனா எப்டி பதில் சொல்ல முடியும்?” என வசனங்களால் ட்ரெய்லர் நிறைகிறது.

ஆன்ட்ரியாவை மையப்படுத்தியே மொத்தக் காட்சிகளும் நகர்கிறது. பெரியார் புகைப்படம், ராமசாமி பெயர் ஆகிய குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்