மம்மூட்டியின் ‘டர்போ’ ஜூன் 10-ல் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

கொச்சி: வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டர்போ’ திரைப்படம் வரும் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘பிரமயுகம்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அண்மையில் இப்படம் ஓடிடியிலும் வெளியாகி பாராட்டப்பட்டது. இப்படத்துக்குப் பிறகு மம்மூட்டி நடித்துள்ள படம் ‘டர்போ’

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை வைசாக் இயக்கியுள்ளார். ஏற்கெனவே வைசாக் இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். ’டர்போ’ படத்தில் மம்மூட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, தெலுங்கு நடிகர் சுனில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மம்மூட்டியின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்துக்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE