சென்னை: மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘டியர் ஸ்டூண்ட்ஸ்’ படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’. இந்தப் படத்தில் நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்துள்ளனர். சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.
நிவின் பாலி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவை பொறுத்தவரை பாடபுத்தகம், வகுப்பறை, ப்ளாக் போர்டு என பள்ளிக்கூடத்தை மையமாக வைத்த கிராஃபிக்ஸ் காட்சிகளில் நயன்தாரா புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளது தெரிகிறது.
» தனுஷின் ‘ராயன்’ புதிய போஸ்டர் வெளியீடு: விரைவில் முதல் சிங்கிள் என அறிவிப்பு
» “வெற்றியை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை” - ராஷ்மிகா மந்தனா
முன்பு ‘பிரேமம்’ கல்லூரி காதல் கதையை அடிப்படையாக கொண்டு நிவின்பாலி - சாய் பல்லவி நடிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கது.