சென்னை: நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துள்ள விஜய், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். சினிமா, கட்சி என அடுத்தடுத்து பிசியாக இருக்கும் விஜய் சமீபத்தில் விஜய் தனது தாய்க்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் விஜய் கட்டிக்கொடுத்துள்ள சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த் கலந்துகொண்டார்.
சில தினங்கள் இந்தக் கோயிலில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் தரிசனம் செய்துள்ளார். அப்போது பேசிய ஷோபா சந்திரசேகர், "ரொம்ப நாளாக ஒரு பாபா கோயிலை எங்கள் இடத்தில் கட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறிக் கொண்டே இருந்தேன். அதற்கேற்ப அவரும் கட்டிக் கொடுத்துவிட்டார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு வந்து தரிசனம் செய்துவருகிறேன்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago