செப்.5-ல் விஜய்யின் ‘The GOAT’ ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: செப்.5-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘The GOAT’ ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Goat) . இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்த இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்.5-ம் தேதி ‘The GOAT’ ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய்யின் புதிய போஸ்டர் உடன் இதனை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்கள் வலைதளங்களில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்