சிறுவயதில் வசித்த வீட்டை வாங்க நடிகர் அக்‌ஷய் குமார் ஆசை

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருந்தார். இப்போது,டைகர் ஷெராஃப், பிருத்விராஜுடன் ‘படே மியான் சோட்டே மியான்’ என்றபடத்தில் நடித்துள்ளார். இது, வரும்10-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அக்‌ஷய் குமார் அளித்துள்ள பேட்டியில் சிறுவயதில் தான் வாடகைக்கு வசித்த வீட்டை வாங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "நான் சிறுவனாக இருந்தபோது வசித்த வீட்டை அவ்வப்போது பார்த்து வருவேன். 2 படுக்கை அறை கொண்ட அந்த வீட்டுக்கு ரூ.500 வாடகை கொடுத்துவந்தோம். அப்பா, காலையில் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் திரும்புவார். என் சகோதரி அவர் வருகைக்காகக் காத்திருப்பதும் என் கண்ணுக்குள் இருக்கிறது.அங்கு கொய்யா மரங்கள் இருக்கும். அந்த குடியிருப்பின்மூன்றாவது மாடியை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்