சென்னை: “என்னுடைய அடுத்த படத்தின் கதாபாத்திர தோற்றம் அது. யாரும் கவலைப்பட வேண்டாம். அந்தக் கதாபாத்திரத்துக்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி போன்ற வயதான தோற்றம் தேவைப்பட்டது. அதனால், அந்த கெட்டப்பில் இருக்கிறேன்” என ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஜாக்கி இது உன்னுடைய 70-வது பிறந்த நாள் என்று பல நண்பர்கள் எனக்கு நினைவூட்டினார்கள். ஒவ்வொரு முறையும் இந்த எண்களை கேட்கும்போது, என்னுடைய இதயம் ஒரு நொடி நின்றுவிடும். எனக்கு 70 வயது ஆகிவிட்டதா என்ற அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும்போது, மற்றொரு விஷயம் எனது நினைவுக்கு வரும். அதாவது என்னுடைய மூத்த சகோதரர் சம்மோ ஹர் ஒருமுறை, ‘வயதாவது என்பது அதிர்ஷ்டகரமான விஷயம்’ என்று சொன்னார். எங்களைப் போன்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கான வயது முதிர்வு எந்த அளவுக்கு அதிர்ஷ்டமான ஒன்று என தெரியவில்லை.
அண்மையில் எனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதை பார்த்தேன். என்னுடைய அடுத்த படத்தின் கதாபாத்திர தோற்றம் அது. யாரும் கவலைப்பட வேண்டாம். அந்தக் கதாபாத்திரத்துக்கு வெள்ளை முடி, வெள்ளை தாடி போன்ற வயதான தோற்றம் தேவைப்பட்டது. அதனால் அந்த கெட்டப்பில் இருக்கிறேன்.
புதிய விஷயங்களை முயற்சி செய்வது எப்போதும் எனக்குப் பிடிக்கும். நான் 62 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் மதிக்கிறேன். லவ் யூ ஆல். மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருங்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும், தன்னுடைய பழைய புகைப்படங்களையும் இத்துடன் இணைத்து வெளியிட்டுள்ளார்.
» “வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால்...” - விஜய் ஆண்டனி கருத்து
» நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு
முன்னதாக, அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாக்கி சானின் வெள்ளை முடியுடன் கூடிய வயதான தோற்றம் இணையத்தில் வைரலாக பரவியது. அவரது ரசிகர்கள் பலரும், ஜாக்கி சானின் இந்த தோற்றத்தைக் கண்டு, அவரது உடல் நலம் குறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago