கவனம் ஈர்க்கும் தோற்றம் - அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: அல்லு அர்ஜூன் பிறந்த நாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசர் எப்படி?: தெலங்கானாவில் பழங்குடி மக்களின் திருவிழாவான ‘ஜடாரா’வுடன் டீசர் தொடங்குகிறது. காதில் தோடு, காலில் சலங்கை, கழுத்தில் மாலை, ஆபரணங்களுடன் சேலை அணிந்து வித்தியாசமான மேக்கப் அப்புடன் புதுவித தோற்றத்தில் காட்சியளிக்கிறார் அல்லு அர்ஜூன்.

ஆயிரக்கணக்கானோர் குழுமியிருக்கும் அந்த திருவிழாவில் அவருக்கு மாஸ் இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. அதற்கு பின்னணியில் இசையால் தனது உழைப்பை கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். கதாபாத்திரத்துக்கான தனித்துவ உடல்மொழியில் அல்லு அர்ஜூன் நடந்து வருவதும், சிலரை அடித்துவிட்டு அவர் செய்யும் சைகையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்