சென்னை: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா , ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற்றது.
80 சதவிகித காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அநேகமாக இப்படம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கான பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்தபடி கையில் துப்பாகியுடன் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
» கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஜூன் மாதம் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
» “தண்ணீர் கேன் விற்றேன், ஓட்டலில் வேலை செய்தேன்...” - அனுபவம் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago