சென்னை: ‘புஷ்பா 2’ படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை, முந்தைய பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்துடன் காணப்படுகிறார்.
» “என்னையும் சில அரசியல் கட்சிகள் அணுகின” - இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஓபன் டாக்
» “மாங்கொல்லை கிராமத்தில்...” - விமலின் ‘மா.பொ.சி’ அறிமுக வீடியோ எப்படி?
நகைகள் அணிந்து, கையை கண்ணுக்கு அருகில் வைத்து போஸ் கொடுத்தபடி நின்றுகொண்டிருக்கிறார். முன்னதாக தனது கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், “என் கேரக்டரான ஸ்ரீவள்ளி, ‘புஷ்பா’வுக்கு மனைவி ஆகிவிட்டதால் இன்னும் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. இதில் அதிகமான டிராமாவும் மோதல்களும் இருக்கின்றன” என்றார். படத்தின் டீசர் 8-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago