லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியிடமிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டை ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் ரூ.496 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் பென் அஃப்லெக். இவர் நடித்த ’பியர்ல் ஹார்பர்’, ‘ஆர்கோ’, ‘கான் கேர்ள்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவர். ஜாஸ் ஸ்னைடர் இயக்கிய டிசி காமிக்ஸ் படங்களில் பேட்மேனாக நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.
அண்மையில், இவரும் இவரது மனைவி ஜெனிஃபர் லோபஸும் நியூயார்க் நகரில் வீடு தேடி கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வைரலாகின. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சொந்தமான ஒரு சொகுசு பங்களாவை பென் அஃப்லெக் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பங்களாவின் மதிப்பு ரூ.496 கோடி என்று கூறப்படுகிறது. சுமார் 5.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பங்களாவில் 12 படுக்கை அறைகள், 24 குளியல் அறைகள், ஜிம், உள்ளரங்கு விளையாட்டு மைதானம், சலூன், ஸ்பா ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்ட இந்த பங்களாவை தற்போது பென் அஃப்லெக் - ஜெனிஃபர் லோபஸ் தம்பதி வாங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago