கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மே 24-ல் ரிலீஸ்?

By செய்திப்பிரிவு

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பின் மே 24-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE