விஜய்யின் ‘கில்லி’ ஏப்ரல் 20ல் உலகமெங்கும் ரீ-ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் ஆக கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு இப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் சொல்லலாம். வித்யாசாகர் இசையில் ‘அப்படிப் போடு’ உள்ளிட்ட எல்லா பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.

சமீபகாலமாக தமிழில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷ் நடித்த ‘3’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வரவேற்பை பெற்றன.

அந்த வரிசையில் தற்போது விஜய் நடித்த ‘கில்லி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. இதற்கான புதிய ட்ரெய்லரும் இன்று வெளியாகிறது. பல மாதங்களாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தின் ரீரிலீஸ் தேதி குறித்து கேட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்