‘ஜோக்கர் 2’ ட்ரெய்லர் ஏப்ரல் 9-ல் ரிலீஸ்: புதிய போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ’ஜோக்கர் 2’ படத்தின் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ‘ஜோக்கர்’ உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. அதிக வசூல் செய்த ஆர் ரேட்டட் படங்களில் இப்படமும் ஒன்று.

இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மியூசிக்கல் திரைப்படமாக உருவாகும் இதில் பிரபல பாப் பாடகி லேடி காகா நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்