சென்னை: விஜய்யின் 69-ஆவது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை தவிர்த்து மேலும் ஒரு படத்துடன் திரையுலகிலிருந்து வெளியேறி, முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 69-வது படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் அண்மையில் சூர்யா படத்தை இயக்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது புது அப்டேட்டாக விஜய்யை சந்தித்து இயக்குநர் ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அது விஜய்க்கு பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை டிவிவி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
ஹெச்.வினோத்தை பொறுத்தவரை, அவர் கமலை வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கமல் தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.வினோத் தன்னுடைய படங்களில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். எனவே, விஜய், ஹெச்.வினோத்தை டிக் செய்ததற்கு கதையின் அரசியல் அடர்த்தியும் காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago