“‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தைப் பார்க்குமாறு ராகுல் காந்திக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர் அதைப் பார்க்கத் தயாராக இருந்தால், அவருக்காக முழு தியேட்டரையும் என் பணத்தில் புக் செய்து தருகிறேன். இப்படத்தை பார்த்தபின் அவர் சாவர்க்கரைப் பற்றி தவறாக பேசுவதை நிறுத்திவிடுவார்” என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சியிலிருந்து பாலிவுட் படங்கள் அரசியல் தளங்களில் ஏற்படுத்தியுள்ள பிரச்சார தாக்கத்தை புரிந்துகொள்ள முடியும்.
மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்வது, டிஜிட்டல் பிரச்சாரம், போஸ்டர் பிரச்சாரங்கள் எல்லாம் தாண்டி தற்போது சினிமாவை தேர்தல் பிரச்சார களமாக மாற்றியுள்ளது பாலிவுட் திரையுலகம். குறிப்பாக அந்தப் பிரச்சாரங்கள் பெரும்பாலும் பாஜக சார்பு நிலையில் இருப்பதையும் கவனிக்க முடிகிறது.
குறிப்பாக ‘Accident or Conspiracy: Godhra’ (மார்ச் வெளியீடு), ‘12த் பெயில்’ பட புகழ் விக்ராந்த் மாஸ்ஸியின் ‘The Sabarmati Report’ (மே வெளியீடு) இந்த இரண்டு படங்களும் பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் இந்து - முஸ்லிம் கலவரம் வெடித்தது. இதனை மையப்படுத்திய இப்படங்களில் ஒன்று, கடந்த மாதம் வெளியாகிவிட்டது. மற்றொன்று மே மாதம் வெளியாகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ‘Aakhir Palaayan Kab Tak?’ வெளியானது. இந்தப் படம் இந்து - முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினையை பேசுகிறது. அதேபோல ஹைதராபாத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை பேசுகிறது ‘Razakar: The Silent Genocide Of Hyderabad’. மார்ச் மாதம் வெளியான இப்படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடித்திருந்தார். படத்தை தயாரித்தவர் பாஜகவைச் சேர்ந்த குண்டூர் நாராயண ரெட்டி. இவர் நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்.
சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று படமான ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. யாமினி கவுதம், பிரியாமணி நடிப்பில் கடந்த பிப்ரவரி இறுதியில் வெளியானது ‘ஆர்ட்டிகிள் 370’. இப்படத்தை இந்தியப் பிரதமர் மோடி பாராட்டினார். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான களத்தை மையமாக வைத்து உருவானது இப்படம். பெரும்பாலும் பிரச்சார தொனியில் படம் இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல வலதுசாரிகளுக்கு எதிரான கல்வி நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன. ஊர்வசி ரவுட்டலா நடிப்பில் வினய் சர்மா இயக்கத்தில் இம்மாதம் வெளியாக உள்ள இந்திப் படம் ‘JNU: Jahangir national university’. இடதுசாரிகளை ‘நாட்டை பிளவுபடுத்தபவர்களாக’ காட்சிப்படுத்தியிருப்பதும், பாகிஸ்தான், தீவிரவாதம், ஜெய் ஸ்ரீராம் முழக்கம் என சகல விஷயங்களும் அடங்கிய தொகுப்பாக இப்படம் உருவாகியுள்ளதை அதன் ட்ரெய்லர் நிறுவுகிறது.
இடதுசாரிகளை குறிவைக்கும் மற்றொரு படம் ‘Bastar: The Naxal Story’. ‘கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியுள்ளார். அதேபோல முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கையைப் பேசும், ‘Main atal hoon’. இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி நடித்திருந்தார். இப்படியாக தொடர் பிரச்சார கதைகள் தேர்தல் காலத்தில் வெளியாகின்றன.
“இந்தப் படங்கள் இப்போது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது ஆபத்தானது. இதைப் பார்த்தால் உண்மையிலேயே பயமாக இருக்கிறது” என்கிறார் பாலிவுட் விமர்சகரும், திரைக்கதை எழுத்தாளருமான ராஜா சென். அவரின் கூற்றை நிரூபிக்கிறது விவேக் அக்னிஹோத்திரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. காரணம், இப்படத்தில் வசூல் ரூ.300 கோடி. அதேபோல சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான ‘கேரளா ஸ்டோரி’. இப்படமும் கிட்டதட்ட ரூ.200 கோடியை வசூலித்தது. வெறுப்பை உமிழ்ந்த இரண்டு படங்களும் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட படங்கள். மேலும், பாஜக ஆளும் மாநிலங்கள் வரிவிலக்கு ரத்து செய்யப்பட்ட படங்கள்.
முன்னதாக, இதே ஃபார்முலா 2019-ம் ஆண்டும் பயன்படுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் ‘Accidental Prime Minister (PM)’ மற்றும் புல்வாமா தாக்குதலை மையப்படுத்திய ‘Uri: The Surgical Strike’ ஆகிய படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் தேர்தலுககு முன்பு வெளியானதை கவனிக்க வேண்டியது.
இதற்கு அப்படியே மறுபுறம் வலதுசாரிகளுக்கு எதிரான படங்கள் வெளியாகும்போதும், அவை ‘பாய்காட்’ ட்ரெண்டை எதிர்கொள்கின்றன. ஆமீர்கான் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக’ கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ‘லால் சிங் சத்தா’ படம் பாய்காட் ட்ரெண்டிங்கால் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அப்படம் தோல்வி. இதற்கான சமீபத்திய உதாரணம் நயன்தாராவின் ‘அன்னபூரணி’. இறுதியில் இப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இதனிடையே, இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளரான கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ விரைவில் வெளியாக உள்ளதும் கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago