மிருணாளின் அந்த அறை... - விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கீதா கோவிந்தம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. மிருணாள் தாக்குர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். ரொமான்டிக் ஃபேமிலி டிராமாகவாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - பொறியாளரான விஜய் தேவரகொண்டாவுக்கும், அவர் வீட்டின் மேல்தளத்தில் குடியிருக்கும் மிருணாள் தாக்குருக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் குடும்ப உறவுகளின் சிக்கலும், பொருளாதார பிரச்சினைகளும் ஒன்றுசேர கைகோத்துக்கொள்கிறது.

பெரும்பாலும் காதலை மையப்படுத்தி நகரும் காட்சிகளும், இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் கவனிக்க வைக்கிறது. ‘என்ன அடிச்சாதான் உன் கோபம் குறையும்னா அடி’ என்று விஜய் தேவரகொண்டா சொல்ல, மிருணாள் ஓங்கி அறைகிறார். அத்துடன் ட்ரெய்லர் முடிகிறது. டைட்டில் ட்ராக் மியூசிக் தனித்து தெரிகிறது. ஓரளவு நம்பிக்கை அளிக்கும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்