‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்பு?

By செய்திப்பிரிவு

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதையடுத்து அவருக்கு பதில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு தாமதாவதால் தேதிகள் பிரச்சினை காரணமாக இப்படத்திலிருந்து முதலில் நடிகர் துல்கர் சல்மான் விலகினார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினார்.

இந்த நிலையில், தற்போது துல்கர் சல்மானுக்கு பதில் இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் சிலம்பரசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் சிம்பு நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்