டோக்யோ: ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய்தேவ்கன், ஸ்ரேயா உட்பட பலர் நடிப்பில் ராஜமவுலி இயக்கிய படம், ‘ஆர்ஆர்ஆர்'. கீரவாணி இசை அமைத்தார். கடந்த வருடம் மார்ச் மாதம், வெளியான இந்தப் படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இந்நிலையில், இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் ஜப்பானில் நேற்று முன் தினம் நடந்தது. இதற்காக இயக்குநர் ராஜமவுலி தனது மனைவியுடன் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் 83 வயது ரசிகை ஒருவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து ராஜமவுலிக்கு சிறப்புப் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
இதை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள ராஜமவுலி, “ஆர்ஆர்ஆர் படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த 83 வயது ரசிகை, வண்ணத்தாள்களில் செய்யப்பட்ட ஆயிரம் ஓரிகாமி கொக்குகளை (origami cranes) பரிசளித்து எங்களை ஆசிர்வதித்தார். சில செயல்களுக்கு நம்மால் நன்றியை மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும்” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து தங்களுக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago