‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘பிரமயுகம்’ மூன்றும் விவாதங்களை எழுப்பியுள்ளன - பிருத்விராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: மலையாள சினிமாவில் வெளியான 3 படங்களும் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலைத்தாண்டி நிறைய விவாதங்களை எழுப்பியுள்ளதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

‘ஆடு ஜீவிதம்’ படத்துக்கான புரமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘பிரமயுகம்’, ‘பிரேமலு’ ஆகிய மூன்று படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பாக்ஸ் ஆஃபீஸ் நம்பருக்காக சொல்லவில்லை. அதையும் தாண்டி நிறைய விவாதங்களை இப்படங்கள் எழுப்பியுள்ளன.

இந்தப் படங்களின் வெற்றிகள் மூலம் நான் பயனடைந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். ‘ஆடு ஜீவிதம்’ படத்துக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பு? மலையாளத்திலிருந்து அடுத்த பெரிய படம் என்பதாலா? இருக்கலாம். அதனால் நான் இந்த 3 படங்களுக்கும் கடன் பட்டிருக்கிறேன்.

இப்படங்களின் வெற்றி அடுத்து வரும் என்னுடைய வெற்றிப் படத்துக்கான களத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. தவறாக நினைக்க வேண்டாம். இது ஒருவகையில் சுயநலமாகவும் இருக்கலாம்” என்றார். பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் பான் இந்தியா முறையில் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்