‘குட் நைட்’ பட நாயகி மீதா ரகுநாத் திருமணம் 

By செய்திப்பிரிவு

சென்னை: ‘குட் நைட்’ படம் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மீதா ரகுநாத். இப்படத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அத்துடன் மணிகண்டனின் மனைவி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மீதா ரகுநாத்தின் சொந்த ஊரான ஊட்டியில் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இரு வீட்டார் முன்னிலையில், நண்பர்கள், உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை மீதா ரகுநாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்