மும்பை: தபு, கிருத்தி சனோன், கரீனா கபூர் நடித்துள்ள ‘க்ரூ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘லூட் கேஸ்’ படத்தை இயக்கிய ராஜேஷ் ஏ.கிருஷ்ணன் இயக்கத்தில் தபு, கிருத்தி சனோன், கரீனா கபூர் நடித்துள்ள படம் ‘க்ரூ’. பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் அனில் கபூர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் பாடகர் திலிஜித் தோசன்ஜ் மற்றும் நகைச்சுவைக் கலைஞர் கபில் சர்மா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - கோஹினூர் ஏர்லைனஸ் என்ற விமான நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் தபு, கிருத்தி சனோன், கரீனா கபூர். திவாலாகும் நிலையில் இருக்கும் நிறுவனத்தில் மாதா மாதம் சம்பளம் பெறவே மூவரும் சிரமப்படுகின்றனர். விமானத்தில் இறக்கும் ஒரு முதியவரின் உடலில் தங்கம் இருப்பதைக் கண்டு, இவர்கள் மூவருக்கும் தங்கம் கடத்தும் ஆசை வருகிறது. இதன் பிறகு தங்கம் கடத்தலில் ஈடுபடும் மூவருக்கும் சிலபல சிக்கல்கள் ஏற்படுவதாக ட்ரெய்லரில் காட்டப்படுகின்றன.
ஏறக்குறைய படத்தின் முக்கால்வாசி கதையையும் ட்ரெய்லரில் காட்டிவிடுகிறார்கள். இதையும் தாண்டி ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதை அவசியம். ட்ரெய்லர் முழுக்க வரும் நகைச்சுவையான வசனங்களும், அதிரடியாக காட்சிகளும் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது என்று உறுதி கூறுகின்றன. ‘க்ரூ’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago