சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான படம், ‘துப்பறிவாளன்’.
இதன் அடுத்த பாகம் ‘துப்பறிவாளன் 2’ என்ற பெயரில் உருவானது. இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது, படத்தைத் தயாரித்து நடித்த விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தில் இருந்து மிஷ்கினை நீக்கிய விஷால், தானே இயக்குவதாக அறிவித்தார்.
இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், “25 வருடங்களுக்கு பிறகு என் கனவு, லட்சியம், வாழ்க்கையில் நான் என்னவாக வேண்டும் என்று நினைத்த என் முதல் எண்ணம் இப்போது நனவாகிறது. ’துப்பறிவாளன் 2’படம் முலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். இதற்கு லொகேஷன் பார்ப்பதற்காக, லண்டன், அஜர்பைஜான், மால்டா செல்கிறோம். இயக்குநராக எனது கனவை அடைய உதவிய மிஷ்கினுக்கு நன்றி. உங்கள் குழந்தையை கைவிடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago