டிஜிட்டல் ஒளிப்பதிவு பற்றிய பைனரி இமேஜஸ் 

By செய்திப்பிரிவு

ஒளிப்பதிவு பற்றிய புத்தகங்களை தொடர்ந்து எழுதி வருகிறார், ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார். ‘பெரியார்’, ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், இப்போது அவர் ‘டிஜிட்டல் ஹியூஸ்’, ‘பைனரி இமேஜஸ்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: ‘டிஜிட்டல் நிறங்கள்’ என்று தமிழில் நான் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஆங்கிலத்திலும் எழுதச் சொன்னார். அதனால் எழுதியதுதான் ‘டிஜிட்டல் ஹியூஸ்’.இது ஒளிப்பதிவு பற்றி நான் எழுதிய 11-வது புத்தகம்.

ஒரு திரைப்படத்துக்கான, டிஐ (Digital intermediate) பற்றிய முழுமையான விவரங்களை உள்ளடக்கிய புத்தகம். படப்பிடிப்புக்கு முன்பே டிஐ-யை எப்படி பயன்படுத்துவது, தியேட்டருக்காக ஒரு படம் டிஐ பண்ணும்போது எவ்வளவு பிரைட்னஸ் வைத்து கலர் கிரேடிங் பண்ண வேண்டும், ஓடிடி-க்கு எப்படி அதை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களில் இருந்து ஒளிப்பதிவில் தற்போது வந்திருக்கிற நவீன மாற்றங்கள் என பல விஷயங்களை இதில் எழுதியிருக்கிறேன். இன்னொரு புத்தகம் ‘பைனரி இமேஜஸ்’.

இது திரையுலகினருக்கான, டிஜிட்டல் ஒளிப்பதிவு பற்றிய கையேடு. கேமரா சென்சார், லைட்டிங், லென்ஸ், ஐமேக்ஸுக்கு எப்படி ஒளிப்பதிவு பண்ண வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அலசியிருக்கிறேன்.

விஸ்காம் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்த புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.இவ்வாறு சி.ஜே.ராஜ்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE