‘மார்கழி திங்கள்’, ‘சாமானியன்’ படங்களில் நடித்துள்ள நக்ஷா சரண், கதையின் நாயகியாக நடிக்கும் படம், ‘பைக் டாக்ஸி’. நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், கே.எம். இளஞ்செழியன் தயாரிக்கும் இதில், வையாபுரி, காளி வெங்கட், ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் நாய்க்குட்டி ஒன்றும் இடம்பெறுகிறது.கவுண்டமணி நடித்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, பாடகி ராஜலட்சுமி நடித்த ‘லைசென்ஸ்’ படங்களை இயக்கிய கணபதி பாலமுருகன், இயக்குகிறார். ஏ.ஆர்.ரெஹைனா இசையமைக்கிறார்.
ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி கணபதி பாலமுருகன் கூறும்போது, “வித்யா எனும் பைக் டாக்ஸி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதைதான் படம், ஒரு நாள், 6 மனிதர்கள், 6 கதைகள் என படம் சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார். இந்தப் படத்தின் முதல் தோற்ற வெளியீடு திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago