கமல் வரிகள், ஸ்ருதிஹாசன் இசையில் லோகேஷ் கனகராஜ் - ‘இனிமேல்’ ஆல்பம்

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்வரி 7-ம் தேதி கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதிஹாசனும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது. அதில், ‘இதுவே ரிலேஷன் ஷிப்’ என கேப்ஷனிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் புரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு அந்நிறுவனம் தற்போது அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் வீடியோ கேம் விளையாடுவதற்கு பயன்படும் ஜாய் ஸ்டிக்ஸ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆல்பம் பாடல் எப்போது வெளியாகும் என்ற எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்