விஜய்யின் ‘கோட்’ படத்தில் த்ரிஷா சர்ப்ரைஸ் நடனம்?

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்து வரும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடிகை த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாடல் ஒன்றில் விஜய்யுடன் இணைந்து அவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தில் நடிகை த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கில்லி’ படத்தில் வெளியான ‘அப்படிப் போடு’ பாடலைப் போன்ற குத்து பாடல் ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விஜய் - த்ரிஷா ‘லியோ’ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்