“தமிழனா பொறந்தது தப்பா?” - ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரெபல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத்துக்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - கேரளத்தில் சென்று படிக்கும் தமிழ் மாணவர்கள் அங்கு நடக்கும் பிரச்சினைக்குள்ளாவது படத்தின் களம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. கருணாஸின் கேரள பேராசியர் வேடம் கவனம் பெறுகிறது. பாண்டி என்ற பெயர் கொண்ட கதாபாத்திரம் கேரள கல்லூரியில் நகைப்புக்குள்ளாகிறது. காரணம் தமிழர்களை பாண்டி என பொதுவா அந்த மக்கள் அழைக்கின்றனர்.

இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கும் தமிழ் மாணவருக்கும் காதல் மலர்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என குறிப்பிடப்படும் ட்ரெய்லரில், “நாங்க தமிழனா பொறந்தது தப்பா சார்” போன்ற வசனங்கள் மூலம் படம், இரு தரப்புக்குமான பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது. தமிழ், தமிழர் என்ற பாணியில் ட்ரெய்லர் பயணிக்கிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE