ஆஸ்கர் 2024 | சிறந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் @ ‘ஒப்பன்ஹெய்மர்’

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் வென்றார்.

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்‌ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த இயக்குநர் விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ படத்தை இயக்கிய ஜஸ்டின் ட்ரியட், ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்செஸி, ‘புவர் திங்ஸ்’ படத்தை இயக்கிய யோர்கோஸ் லான்திமோஸ், ‘தி ஸோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட்’ படத்தை இயக்கிய ஜானதன் க்ளேஸர் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த பட்டியலில் தற்போது ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்