ஆஸ்கர் 2024 | சிறந்த உறுதுணை நடிகை டேவின் ஜாய் ரேண்டால்ஃப் @ ‘ஹோல்டோவர்ஸ்’

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சலஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த உறுதுணை நடிகையாக ‘ஹோல்டோவர்ஸ்’ படத்தில் நடித்த டேவின் ஜாய் ரேண்டால்ஃப் வென்றார்.

இந்த படத்தில் மேரி லாம்ப் எனும் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்‌ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதி வழங்கப்படுகிறது.

சிறந்த உறுதுணை நடிகை விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த எமிலி பிளண்ட், தி கலர் பர்பிள் படத்தில் நடித்த டேனியல் ப்ரூக்ஸ், பார்பி படத்தில் நடித்த அமெரிக்கா ஃபெரெரா, நியாட் படத்தில் நடித்த ஜோடி ஃபாஸ்டர் மற்றும் ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டேவின் ஜாய் ரேண்டால்ஃப் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் டேவின் ஜாய் ரேண்டால்ஃப் விருதை வென்றிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE