‘டிராகன் பால்’ தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார்: அனிமே ரசிகர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

டோக்யோ: உலகப் புகழ் பெற்ற ‘டிராகன் பால்’ காமிக்ஸ், கார்ட்டூன் தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார். அவருக்கு வயது 68.

ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் வரிசையில் உலகம் முழுவதும் அதிக புகழ்பெற்றதும், ஏராளமான ரசிகர்களையும் கொண்ட தொடர் ‘டிராகன் பால்’. இதில் இடம்பெற்ற கோகு, வெஜிட்டா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் பெரும் பிரபலமானவை. 1984 முதல் இன்றுவரை காமிக்ஸ், அனிமே கார்ட்டூன், வீடியோ கேம் போன்ற பல வடிவங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது இத்தொடர்.

இந்த தொடரையும், அதன் கதாபாத்திரங்களையும் உருவாக்கிய அகிரா டொரியாமா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக. டொரியாமாவின் பேர்டு ஸ்டுடியோ உறுதி செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான 'சப்டுரல் ஹீமாடோமா’ நோய் காரணமாக மாங்கா படைப்பாளி அகிரா டொரியாமா மார்ச் 1 ஆம் தேதி காலமானார் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

சப்டுரல் ஹீமாடோமா என்பது மண்டை ஓடு மற்றும் மூளையின் மேற்பரப்புக்கு இடையில் இரத்தம் ஓடாமல் தேங்கும் ஒரு நோய் என்பது குறிப்பிடத்தக்கது. அகிராவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அனிமே ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE