சென்னை: தனுஷ் நடிக்கும் 51-வது படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர் தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். தொடர்ந்து அவரது 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் முதல் தோற்றத்தையும், டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
» “குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” - இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து
» காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு
முதல் தோற்றம் எப்படி? - முதல் தோற்றத்தை பொறுத்தவரை கிழிந்த சட்டை, அழுக்கடைந்த தோற்றத்தில் மீசையும், தாடியுமாக பரிதாபத்துடன் யாசகர் போல் நின்றுகொண்டிருக்கிறார் தனுஷ். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதியின் படங்கள் உள்ளன. ‘குபேரா’ என டைட்டிலுக்கு எதிர்மாறான தோற்றம் படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago