சென்னை: படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல இருந்த நடிகர் அஜித்குமார், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார் (52). துணிவு படத்தை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை வந்த அஜித்குமார் உள்ளிட்ட படக்குழு வினர் மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், திடீரென்று அஜித்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரதுஉடல்நிலையை பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துவருகின்றனர். ஓரிரு நாளில்சிகிச்சை முடிந்து அஜித்குமார் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாவது:
» மாநிலங்களின் கொள்கை உருவாக்கத்துக்கு புதிய தளம்: நிதி ஆயோக் அறிமுகம்
» பாக். பஞ்சாப் மாகாணத்தில் முதல்முறையாக அமைச்சரானார் சீக்கியர்
வழக்கமான பரிசோதனை: ‘விடாமுயற்சி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் அஜர்பைஜானில் தொடங்கவுள்ளது. அஜித்குமார் அங்கு செல்லவுள்ளார். அதற்காக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக, சென் றுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக உள்ளது. ஓரிரு நாளில் மருத்துவ மனையிலிருந்து திரும்புவார் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago