‘ராமாயணம்’ படத்துக்கு தயாராகும் நடிகர்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: ராமாயண கதையை வைத்து பல்வேறு திரைப் படங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், அதிக பொருட் செலவில் ராமாயணக் கதை திரைப்படமாகிறது. 3 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர், ராமராக நடிக்கிறார். சாய்பல்லவி சீதையாக நடிக்கிறார்.

ராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். கைகேயி-யாக லாரா தத்தா, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஏப்.17-ம் தேதி ராமநவமி அன்று வெளியாக இருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்