திரை விமர்சனம்: சத்தமின்றி முத்தம் தா

By செய்திப்பிரிவு

தன்னைக் கொல்ல வருபவரிடம் இருந்து தப்பித்து ஓடும் சந்தியா (பிரியங்கா திம்மேஷ் ), விபத்தில் சிக்குகிறார். அவருக்குத் தலையில் அடிபட்டதா, தனது கணவன் யார் என்பது உட்பட சில நினைவுகள் மறந்துவிடுகின்றன. ஒரு கட்டத்தில், தன்னுடன் வீட்டில் இருப்பது பள்ளிப்பருவக் காதலன் விக்னேஷ் (ஸ்ரீகாந்த் ) என்பது சந்தியா வுக்குத் தெரிய வருகிறது. காதலனையே திருமண ம் செய் து கொண்டேனா என்று அவர் மகிழ்ச்சியில் இருக்கும்போது, தனது மனைவி சந்தியாவை காண வில்லை என்று ரகு (வியான்) என்பவர் போலீஸில் புகார் கொடுக்கிறார். சந்தியாவின் கணவன் யார்? காதலன் விக்னேஷ் அவர் வாழ்க்கைக் குள் வந்தது எப்படி? சந்தியாவைக் கொல வந்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி படம்.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அத்தனை ஸ்கோப் இருக்கும் கதையை கொண்ட படம். விபத்தில் சிக்கி சாலையில் கிடக்கும் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கும் கணவனின் பார்வையில் தொடங்குகிறது கதை. அதுவே அடுத்தடுத்தக் காட்சிகளில் திருப்பங்களுக்குள் செல்லும்போது பதற்றத்தைச் வரவழைக்கிறது. அதற்கு சின்ன சின்ன ட்விஸ்ட்களும் அதிரடியாக வரும் ஆக்‌ஷன் காட்சிகளும் உதவி இருக்கின்றன.

ஆனால், வலுவில்லாத திரைக்கதையாலும் அழுத்தமில்லாத காட்சியாக்கத்திலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் ராஜ்தேவ். கூலிக்கு கொலை செய்யும் விக்னேஷ், அவரை தேடும் போலீஸ் அதிகாரி எட்வர்ட்டின் (ஹரீஷ் பெரேடி) பூனை எலி துரத்தலுக்கான திரை எழுத்தை இன்னும் பரபரப்பாக்கி இருக்கலாம். விக்னேஷ், கொலைகாரனாக மாறியதற்குச் சொல்லப்படும் காரணத்தில் வலுவில்லை.

தன்னுடன் இருப்பது கணவன் இல்லை என்பது உணரும் சந்தியா, வீட்டுக்குள்ளேயே 2 பேரை கொன்று விக்னேஷ் புதைப்பதைப் பார்த்தும் போலீஸிடம் சொல்லாதது ஏன்? என்பது உட்பட ஏகப்பட்ட லாஜிக் சிக்கல்கள்.

தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் காந்த். நினைவுகளை இழந்து தடுமாறும் காட்சியில் பிரியங்கா, கவனிக்க வைக்கிறார். நிஹாரிகா, கிளாமருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஹரிஷ் பெரேடி, வியான் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

யுவராஜின் ஒளிப்பதிவும் ஜுபினின் பின்னணி இசையும் த்ரில்லர் படத்துக்கான அதிகப்பட்ச உழைப்பை வழங்கி இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் சிறந்த த்ரில்லர் அனுபவத்தைத் தந்திருக்கும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE